"திமுக ஐடி விங்க் பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல; அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு நன்மதிப்பு இல்லை": நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பதிலடி! - Seithipunal
Seithipunal


ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாகச் செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் என திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்க்) சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஜான் பிரிட்டோ தனது உறவினர் இல்லை என்றும், தன் மீது அவதூறு பரப்பிய திமுக ஐடி விங்க் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலா ரூ.1 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கட்சியின் தலைவர் என்ற முறையில் பல்வேறு அணிகள் மீது எனக்கு நிர்வாக ரீதியான கட்டுப்பாடு மட்டுமே உள்ளதே தவிர, ஐடி விங்க் உறுப்பினர்களின் தனிப்பட்ட சமூக வலைத்தளப் பதிவுகளுக்கு என்னைச் சட்டரீதியாகப் பொறுப்பாக்க முடியாது. மேலும், போதைப்பொருள் வழக்குத் தொடர்பிலோ அல்லது அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவைப் பற்றியோ பதிவிட நான் எந்த ஒப்புதலோ அறிவுறுத்தலோ வழங்கவில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மாமனார், மாமியார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளதையும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனா சிபிஐ விசாரணையை எதிர்கொண்டதை வில்லிவாக்கம் தொகுதி வேட்புமனுவில் அவரே குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய தகவல்களை மறைத்துவிட்டு நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஸ்டாலின், குற்ற வழக்குகளில் தொடர்புடைய குடும்பப் பின்னணியைக் கொண்ட அவர், சுத்தமான கரங்களுடன் (Clean Hands) நீதிமன்றத்தை அணுகாததால் எவ்வித மான நஷ்டஈடும் கோர உரிமையில்லை என்றும், இவ்வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இந்த வழக்கில் திமுக ஐடி விங்க் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannot Be Held Liable for IT Wing Posts Minister Aadhav Arjuna Lacks Clean Hands MK Stalins Reply in Defamation Suit


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->