சூசகமான பதில்! அதிமுக- பாஜக கூட்டணியில் தவெகவும் இணைய வாய்ப்பு...! அமித்ஷாவின் hint - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டி அளித்தப்போது அவரிடம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அமித்ஷா அவர்கள் தெரிவித்ததாவது," தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது.

எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும்" என்று தெரிவித்தார்.மேலும், தமிழக வெற்றிக்கழகம், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்பதை அமித்ஷா சூசகமாக தெரிவித்திருப்பதாக அரசியல் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

மேலும், தி.மு.க. வை கடுமையாக விமர்சிக்கும் விஜய், அதிமுக, பாஜகவை விமர்சிப்பதில்லை என்று அரசியல் தலைவர்கள் பலராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. மேலும், அதிமுகவுடன் விஜய் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, தற்போது அரசியல் தலைவர்களால் கேட்கப்படும் ஒரே கேள்வி, பெரியார், அண்ணா குறித்த வீடியோவுக்கு விஜய் இதுவரை மௌனம் காப்பது ஏன்? என்பதே.

தற்போது அமித்ஷா தெரிவிருப்பதாவது,'விஜய், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது உறுதி' என்று அரசியல் நிபுணர்களால் எண்ணத் தோன்றுகிறது.எது எப்படியோ, விஜய் தனது நிலைப்பாட்டை உறுதிப்பட தெரிவித்தால் மட்டுமே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hint from AIADMK Amidst possibility joining BJP AIADMK alliance Amit Shahs hint


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->