இன்று வெளியாகப்போகும் முக்கிய தீர்ப்பு.. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு கல்லூரியில் மாணவ - மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்கள் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சார்ந்த மாணவ மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இருதரப்பு இடையே மோதல் போக்கு உண்டானது. 

இந்த பிரச்சினை தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் வாதம் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தட்சிண கன்னடா  மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிப்புற தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அதேபோல உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிவமொகாவில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மார்ச் 21 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijab case today judgment


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->