மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம் - ஜார்க்கண்ட் முதல்வர் அசத்தல் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைவிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு தற்போது ஆட்சி செய்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், 73-வது வனத் திருவிழாவில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். அப்போது அவர் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். வீட்டில் மரம் நட்டு, அவற்றை பாதுகாப்பவர்களுக்கு ஒரு மரத்திற்கு தலா ஐந்து யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டு வருகிறது.  மரங்களை பாதுகாக்கும் விதமாக வீட்டில் மரம் நட்டு வளர்ப்பவர்களுக்கு மின்சாரம் இலவசம் அறிவிப்பு, வரவேற்கத்தக்க அறிவிப்பாகும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hemant soren says free Electricity


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->