'மாநில உரிமைக்காக போராடியவர்'...! - கலைஞர் 103-வது பிறந்தநாளில் முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சிப் பதிவு...! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழறிஞருமான கலைஞர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அந்த பதிவில், தமிழ் மொழியின் வளர்ச்சி, இலக்கியப் பணிகள், திரையுலக சாதனைகள், அரசியல் பயணம், நிர்வாகத் திறன் மற்றும் மாநில உரிமைகளுக்காக முன்னெடுத்த போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய மறக்க முடியாத பங்களிப்புகளை நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாளில், அவருக்கு தனது ஆழ்ந்த மரியாதையையும் பணிவான அஞ்சலியையும் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He fought statehood Chief Minister Vijay resilience artist 103rd birthday


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->