என்னை இந்திய குடிமகளாக காட்டி மக்களை ஏமாற்றுவது வெறும் பைத்தியக்காரத்தனம் - கொந்தளித்த மாடல் அழகி!
hariyana election vote thft congress bjp
அரியானா மாநில வாக்காளர் பட்டியலில் சுமார் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், தவறான முகவரிகள் மற்றும் கும்பல் வாக்காளர் பதிவுகள் போன்ற பெருமளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்த மோசடியை வெளிச்சமிட்டுள்ளார். அவர் வெளியிட்ட தகவல்படி, பிரேசிலைச் சேர்ந்த ஒரு மாடல் அழகியின் புகைப்படம் அரியானாவின் ராய் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் இடம்பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தையும் ராகுல் காந்தி பொதுமக்களுக்கு காட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு வெளியான பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் அந்த பிரேசில் மாடலை கூகுளில் தேடியுள்ளனர். தேடலின் மூலம் அவரது பெயர் “லாரிசா” என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாடல் லாரிசா, சமூக வலைத்தளங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “எனது புகைப்படத்தை இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள் என்பது நம்ப முடியாதது. என்னை இந்திய குடிமகளாக காட்டி மக்களை ஏமாற்றுவது வெறும் பைத்தியக்காரத்தனம். நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?” என கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி கூறிய இம்மோசடி குறித்த குற்றச்சாட்டு தற்போது அரியானா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
hariyana election vote thft congress bjp