இனி அரைகுறை தீர்வுகள் வேலைக்காவது...! 'நீட் தேர்வு ரத்து ஒன்றுதான் வழி' - டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் கருத்து...!
Half hearted solutions no longer work Cancellation NEET exam only way out MK Stalin comment referring Delhi protest
நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"டெல்லியில் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் நீட் தேர்வு அமைக்கப்படலாம் என்று முதன்முதலில் எச்சரித்தது திமுகதான்.அதன் காரணமாகவே, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்கக் காலத்திலிருந்தே திமுக தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நீட் தேர்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், மாணவர்களுக்கு உருவாகும் சிக்கல்கள் மற்றும் சமூகநீதிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம்.சமூகநீதியைப் பாதுகாப்பதில் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த தமிழகம், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கும் வழிவகுத்த மாநிலமாகும்.
அந்தத் தமிழகத்தின் இன்றைய ஒரே முக்கியக் கோரிக்கை, நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதே ஆகும்.மாணவர்களின் நலன் மற்றும் சமூகநீதியைப் பாதுகாக்க நடைபெறும் அனைத்து போராட்டங்களின் மையக் கோரிக்கையாக நீட் தேர்வு ஒழிப்பு இருக்க வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலமே, அதனால் உருவாகும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், கல்வியில் சம வாய்ப்பை உறுதி செய்யவும் நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Half hearted solutions no longer work Cancellation NEET exam only way out MK Stalin comment referring Delhi protest