'தவெக ஆட்சி தமிழகத்துக்கு ஒரு துரதிர்ஷ்டம்; விஜய் ஒரு பொறுப்பற்ற முதல்வர்'; எச். ராஜா விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


''காங்கிரஸில் இருந்து வெளியேறியோர் அரசியலில் சிறந்து விளங்கியுள்ளனர். ஆனால், பாஜகவில் இருந்து வெளியேறி அரசியலில் பிரகாசித்தோர் என்று ஒருவர் கூட கிடையாது'' என அண்ணாமலையை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து மேலும் பேசியதாவது;

அண்ணாமலை தற்போது பாஜகவில் இல்லாததால் அவரை பற்றி பேச வேண்டியதில்லை என்றும், பாஜக சித்தாந்த ரீதியிலான அமைப்பு. காங்கிரஸில் இருந்து வெளியேறியோர் அரசியலில் சிறந்து விளங்கியுள்ளனர். ஆனால், பாஜகவில் இருந்து வெளியேறி அரசியலில் பிரகாசித்தோர் என்று ஒருவர் கூட கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்ணாமலை இல்லாதபோது கூட, கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி 19 சதவீதம் வாக்குகள் பெற்றது என்றும், அண்ணாமலை இருந்தபோது 2024-ஆம் ஆண்டு 18 சதவீதம் தான் பெற்றது என்று எச்.ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேப்போன்று தவெக அரசு சில்லுண்டிகளை சேர்த்துக் கொண்டு பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகவும், கடந்த 35 நாட்கள் ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. விஜய் பொறுப்புள்ள முதல்வராக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளதோடு, தீய சக்தி முதல்வராக விஜய் உள்ளார் என்றும், அரசியல் அனுபவம் இல்லாதோர் அமைச்சர்களாக உள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.

தவெக பொறுப்பற்ற, தான்தோன்றித்தனமாக, மக்கள் மீது அக்கறையற்ற அரசாகவே உள்ளது என்றும், ஆட்சியாளர்கள் கற்பனையிலேயே திரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு முழுமையான மக்கள் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன், மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று விஜய் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தவெக ஆட்சி தமிழகத்துக்கு ஒரு துரதிருஷ்டம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், காவிரி குறுக்கே மேககேதாட்டு அணைக் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்காது என்றும், கர்நாடக அரசு கற்பனை செய்துகொண்டு பேசுவதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? என்று கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்து, ஏற்ற முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினால், அதன்பின்னர் நான் பதில் சொல்கிறேன் என்றும் சிறுபான்மையின மாணவர்கள் மத அடையாளங்கள் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூற பள்ளிக் கல்வித் துறைஅமைச்சருக்கு தைரியம் இருக்கிறதா என்று ஹெச்.ராஜா அமைச்சர் ராஜ்மோகனின் உத்தரவை சுட்டிக்காட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

H Raja criticizes a potential TVK government as a misfortune for Tamil Nadu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->