வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர் மாநாடு; 'மாணவர்களுக்கு துணை நின்று, மாற்றத்தை உருவாக்க வேண்டும்'; பிரியங்கா காந்தி..! - Seithipunal
Seithipunal


தேர்வுத்தாள் கசிவு காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களுக்காக ராகுல் காந்தி தலைமையில் ராஜஸ்தானின் கோடா நகரில் நாளை மாணவர் மாநாடு நடைபெறவுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பியுமான பிரியங்கா காந்தி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறியதாவது;

பொதுமக்களின் நலனில் அக்கறையும் பொறுப்பும் உள்ள நாம் அனைவரும் மாணவர்களுடன் துணை நிற்க வேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் துயரங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஒவ்வொரு தேர்வுக்கு முன்பும் வினாத்தாள் கசியவிடப்படுகிறதாகவும், அதேவேளையில், தேர்வில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார். தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் கடன் வாங்குகிறார்கள். கல்வியை தொடர்ந்து கற்க பெரும் நிதிச் சுமையை சுமக்கிறார்கள். ஆனாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லை என்றும், இது ஓர் ஆழமான கட்டமைப்புச் சார்ந்த பிரச்சின என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, நாம் அனைவரும் உண்மையாகவே மாணவர்களுக்கு துணை நின்று, அவர்களுக்கு ஆதரவளித்து, மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாளை (ஜூன் 17) ராஜஸ்தானின் கோடா நகரில் தொடங்கும் இந்த மாணவர்களுக்கான மாநாடு, தொடர்ந்து அலகாபாத் (ஜூலை 10), பாட்னா (ஜூலை 11), டெல்லி (ஜூலை 14) ஆகிய மாநகரங்களிலும் நடைபெறவுள்ளது.

மாணவர்கள், இளைஞர்களுக்கான அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தேர்வு மோசடியால் பாதிக்கப்படும் பலரும் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priyanka Gandhi says we must stand by students affected by the question paper leak


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->