பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்... இந்து விரோத திமுக ஆட்சி... கொந்தளித்த ஹெச்.ராஜா!
H Raja BJP Condemn to DMK MK Stalin thirupurangundram
பாஜக ஹெச்.ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் கைது! போராடினால் கைது! திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லவும், அக்கோயிலின் தலவிருட்சமான கல்லத்தி மரத்தை தரிசிக்கவும் அனுமதி மறுப்பு..!!
காவல்துறை அதிகாரிகள் சட்ட விதிமுறைகளை பின்பற்றி மக்களை பாதுகாக்க பணி செய்யாமல் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோக உத்தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாஜக மற்றும் இந்து இயக்கத் தலைவர்களை கைது செய்வதில் ஆர்வம் காட்டுவதும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதில் ஆர்வம் காட்டுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் இந்து விரோத திமுக ஆட்சியில் ஒவ்லொரு நாளும் இந்துக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எண்ணிலடங்காதது..!!
பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்கிற பழமொழியை நிரூபிப்பது போலவே தமிழகத்தில் திமுக ஆட்சியில் தினந்தோறும் நிகழும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
தீயசக்தி திமுக ஆட்சி 2026 தேர்தலில் முடிவுக்கு வருவது நிதர்சனம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
H Raja BJP Condemn to DMK MK Stalin thirupurangundram