அண்ணாமலை கருத்துக்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்க வேண்டாம் - மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விளக்கம்!
Annamalais Mumbai Remarks Spark Controversy
"மும்பை மகாராஷ்டிராவிற்கு மட்டுமானது அல்ல; அது ஒரு சர்வதேச நகரம்" என அண்ணாமலை பேசியது மராட்டியத் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ் தாக்கரே (MNS): "தமிழ்நாட்டிலிருந்து வந்த உனக்கும் இந்த மண்ணிற்கும் என்ன தொடர்பு? வட இந்தியர்களைத் தொடர்ந்து இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராகப் பேசுகிறீர்களா?" என ஆவேசமாகச் சாடினார்.
ஆதித்ய தாக்கரே (Shiv Sena UBT): "தேர்தலில் டெபாசிட் இழந்தவர் அடுத்த பிரதமரைப் போலப் பேசுகிறார். அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துவிட்டனர்," என்று விமர்சித்தார்.
முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விளக்கம்: சர்ச்சை வலுத்த நிலையில், "அண்ணாமலைக்கு இந்தி சரியாகத் தெரியாது, அவர் தேசியத் தலைவரும் அல்ல. அவரது கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்து விவாதிக்க வேண்டாம்," எனக் கூறிச் சூழலைத் தணிக்க முயன்றார்.
English Summary
Annamalais Mumbai Remarks Spark Controversy