அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க, 140 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த 26 ஆம் தேதி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நிலையில், நேற்று மாலை இந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர். ஆற்றில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது, 

மேலும், 60 தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குஜராத் கேபிள் பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். ஆற்றில் விழுந்து காணாமல் போனவர்களை விரைந்து மீட்க வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gujarat Bridge Collapse MKStalin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->