விஜய் அதிமுக கூட்டணிக்கு பச்சைக்கொடி?அதிமுக -பிஜேபி -தாவெக இணைந்தால் 99% வெற்றி உறுதி..! நிலைப்பாட்டை மாற்றிய விஜய்? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அரசியல் அரங்கில் இதுவரை “அதிமுக–பாஜக கூட்டணியே கிடையாது” என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார். ஆனால் பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், குறிப்பாக மகாகண்பந்தன் கூட்டணியின் பெரும் தோல்வி மற்றும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜான் சுராஜ் கட்சியின் முழுமையான சரிவுடன், விஜயின் அரசியல் கணக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய கட்சியாக இருப்பதால் தனித்து போட்டியிட்டால் வாக்குகள் கிடைக்கும் எனினும், வெற்றிக்கு போதாது என்பதையும் பீகார் முடிவுகள் தெளிவாகக் காட்டியுள்ளன. பிரசாந்த் கிஷோர் தவெகவுக்கும் ஆலோசனைகள் வழங்கி வந்த நிலையில், அவர் எதிர்பார்த்தபடி ஒரு முடிவும் வராதது விஜயை சிந்திக்க வைத்ததாக கூறப்படுகிறது.

ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட சில அரசியல் ஆய்வாளர்கள்,“விஜய் தனியாக போட்டியிட்டால் வாக்குகள் அதிகம் கிடைக்கும், ஆனால் வெற்றி கிடையாது. அதிமுக–பாஜக கூட்டணியில் சேர்ந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகள் நிச்சயம் வெற்றி.”
என்று கணித்திருந்தனர். விஜயகாந்தின் ஆரம்ப வெற்றியும் இதே மாடலில் தான் இருந்தது என்பதால், விஜயும் இத்திட்டத்தை சீரியஸாக பரிசீலித்துள்ளதாக பேசப்படுகிறது.

மேலும், கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு விஜய் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்தி, திமுகவையே குறிவைத்து விமர்சனங்களை அதிகரித்தது இந்த கூட்டணிக்கான சைகையாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (பாஜக–அதிமுக) இணைந்தால்,திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வராமல் போகலாம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.அதே நேரத்தில், TVK வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைந்து, 40+ வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

மொத்தத்தில், பீகாரின் அதிர்ச்சியால் விஜயின் அரசியல் திசை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிமுக–பாஜக கூட்டணியுடன் சேருவதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார் எனவும் வலுவான தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Green flag for Vijay AIADMK alliance If AIADMK BJP Tvk combine 99 victory is assured Vijay changed his stance


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->