வைகோ காலாவதியான அரசியல்வாதி.. "அப்படி நான் சொல்லவே மாட்டேன்"..!! - தமிழிசையின் செம பதிலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ரவி திராவிட மாடல் என்பது காலவதி ஆகிவிட்ட ஒன்று என கருத்து தெரிவித்திருந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆளுநரின் இத்தகைய கருத்திற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் திராவிட இயக்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் வைகோவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் நேற்று வைகோ காலாவதியான காவல் துறையில் இருந்த வந்த ஆளுநர் கலகம் செய்கிறார் என கூறியது குறித்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் "அண்ணன் வைகோ எந்த நிலையில் உள்ளார் என எனக்கு தெரியவில்லை. ரொம்ப ஆக்டிவா இருக்காரா..?  காலாவதியான அரசியல்வாதி என அவரை சொல்ல முடியுமா..? நான் அவரை அப்படி சொல்லவே மாட்டேன். 

அண்ணன் வைகோ காலாவதியான அரசியல்வாதி என நான் சொல்லவே மாட்டேன். அதனால் அவர் சொல்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என எனக்கு தெரியவில்லை" என வைகோ கூறிய கருத்துக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் நக்கலாக சிரித்துக் கொண்டே பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Tamilisai criticized MDMK vaiko


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->