விஜய் ஆட்சியமைக்க உத்தியோகப்பூர்ப அழைப்பு விடுத்த ஆளுநர்; நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது விஜய் தலைமையிலான தவெக. 118 என்ற மேஜிக் இலக்கத்தை அடையாத நிலையில் விஜய்  முதல்வரானதும் புதிய ஆட்சி அமைவதும் இழிபறியாக இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ், 02 இடதுசாரி கட்சிகள், இந்திய முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவில் 120 பெரும்பான்மையை பெற்றுள்ளது. 

இன்று 04-வது நாளாக லோக் பவனுக்கு சென்ற விஜய், தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்தார். அப்போது தவெக ஆட்சியமைப்பதற்கு விஜய் தரப்பில் உரிமை கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, நாளை மதியம் 3.15க்கு விஜய் நேரு உள்ளரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலாக காலை 10 மணிக்கு விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பொறுப்பு ஆளுநர் உடன் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் சந்திப்பு நடந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் உடன் சேர்ந்து 09 அமைச்சர்களும் நாளை பதவியேற்க உள்ளனர். இதனையடுத்து, தமிழக முதல்வராக பதவியேற்க விஜய்க்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், முதல்வராக பதவியேற்ற பின் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 03 நாள் அவகாசம் ஆளுநரால் விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor Issues Official Invitation to Vijay to Form Government


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->