'ஆரியம் இந்தியர்களின் தரமான வாழ்க்கை முறை, தவறாக பொருள் கொள்ள வேண்டாம்'; ஆளுநர் அர்லேக்கர்..! - Seithipunal
Seithipunal


''ஆரியம் என்பது இந்திய மக்களின் ஒரு தரமான வாழ்க்கை முறை  அதனை தவறாக பொருள்கொள்ளக் கூடாது'' என்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அருகேயுள்ள தமிழ்நாடு பகுதியான ஆரோவில்லுக்கு சென்ற ஆளுநர் அர்லேக்கருக்கு ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஆரோவில்லில் உள்ள பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்தார்.

அப்போது, அங்கிருந்த வெளிநாட்டவர்களிடம் கலந்துரையாடிய அவர், ''அடுத்த 100 ஆண்டுகளுக்கு உலகை இந்தியா வழி நடத்தும் என்று ஸ்ரீ அரவிந்தர் கணித்ததாகவும் அது இப்போது உண்மையாகி வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆரியம் என்பது இந்திய மக்களின் ஒரு தரமான வாழ்க்கை முறை என்றும், அதனை தவறாக பொருள்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னதாக ஆரோவில்லில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் பார்வையிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor Arlekar describes the Aryan way of life as a high quality lifestyle for Indians


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->