அதிக ஓட்டு பெற வைத்தால் தங்க நகை பரிசு... பரபரப்பு கிளப்பிய மாவட்ட செயலாளர்கள்.!
gold jewelry awarded dmk gets most votes
வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஓட்டு குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிக ஓட்டு பெற்று தரும் வட்டக் கழக செயலாளர்களுக்கு ஒரு சவரன் தங்க மோதிரம் பரிசளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் தனி தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செய்யூர் அருகே அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர் பேசும்போது,
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செய்யூர் எம்.எல்.ஏ பாபு 80,000 ஓட்டு பெற்று வெற்றி அடைந்தார். தற்போது நடைபெறும் இந்த தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்று தங்களது வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் செய்யூர் எம்.எல்.ஏவுக்கு 5 சவரன் நகை வெகுமதி வழங்கப்படும் என வாக்குறுதி தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
gold jewelry awarded dmk gets most votes