இது சரிப்பட்டு வராது., பாஜக கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகிய கூட்டணி கட்சி.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கோவாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, கோவா முன்னணி கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்திருப்பது கோவா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கு உண்டான பணிகளை கோவாவை சேர்ந்த மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த கோவா முன்னணி கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவா முன்னணி கட்சி கட்சி வெளியான அறிவிப்பின்படி, 'பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக கோவா முன்னணி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு ஊழல் நிறைந்ததாகவும், நேர்மையற்றதாகவுகும் செயல்படுகிறது. இதனால் கூட்டணியில் இருந்து நாங்கள் விளக்குகிறோம்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goa bjp alliance break


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->