ஜிகே வாசனை வேதனையில் ஆழ்த்திய மரணம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய மாணவர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மத்திய அரசு, உடனடியாக உக்ரைனில் இருக்கும் அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்கக்கூடிய அனைத்து முயற்சியிலும் ஈடுபட வேண்டும் .

ரஷியா – உக்ரைன் இடையேயான போரினால் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் இந்தியாவின் எண்ணமாக இருக்கிறது. உக்ரைனில் நடைபெறும் போரினால் அங்குள்ள பல நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.
குறிப்பாக போர் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் தொடரும் போரினால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்றைக்கு உக்ரைனில் கார்கீவ் நகரில் நடைபெற்ற குண்டுவீச்சில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.

அதாவது உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற மாணவர் முயற்சித்த போது ஏவுகணை தாக்குதலால் பலியாகிவிட்டார். இந்தியர்களை மீட்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் இப்படி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது நமக்கெல்லாம் கவலை அளிக்கிறது.

மத்திய அரசு, உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மத்திய அரசு, உடனடியாக உக்ரைன் மற்றும் ரஷிய அரசோடு பேசி போரை நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் உக்ரைனிடம் பேசி அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உறுதி செய்துகொள்ள வேண்டும். எச்சூழலிலும் உக்ரைனில் நடக்கும் போரினால் இந்தியர் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை போரில் ஈடுபட்டிருக்கும் இரு நாட்டுக்கும் அழுத்தத்தோடு தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு, உயிரிழந்த மாணவரின் உடலை உக்ரைனில் இருந்து தாய்நாட்டிற்கு கொண்டுவந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். உயிரிழந்த மாணவர் நவீன் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாகும். பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan mourning from student naveen death


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->