திமுக கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கிறது! மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார். பின்னர் ஓசூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தலைவர் மற்றும் பாரத பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்காமல் தமிழகத்தில் கூட்டாட்சி தத்துவமே சிதைந்துள்ளது. 

தமிழகத்தை ஆளும் திமுக அரசு கூட்டாட்சி அமைப்பையே உடைத்து நாசமாக்கி கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் திமுக அரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். நிச்சயமாக திமுகவை மக்கள் தண்டிப்பார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

பிரதமரால் அனுமதி வழங்கப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தற்பொழுது இயங்கிக் கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதிமுக, திமுக அல்லது பிற கட்சி என்ற கட்சி பேதம் என்று பாரபட்சம் இன்றி இந்திய நாட்டின் மக்கள் என்ற நிலையில் திட்டங்களை வாரி வழங்கி வருகிறது. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுவது போன்று எந்த நிலையிலும் பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்காது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொண்டே இருக்கும்" என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Giriraj Singh accused DMK destroys federal philosophy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->