பாஜகவில் இணைகிறாரா குலாம் நபி ஆசாத்.? அவரே அளித்த பரபரப்பு பதில்.! - Seithipunal
Seithipunal


பா.ஜனதாவில் சேரமாட்டேன். விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்று காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 26 ஆம் தேதி, அக்கட்சியில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது, பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பதவி விலகல் கடிதத்தில் 5 பக்கங்களில் அதிகமாக ராகுலை சாடியிருந்தார் குலாம் நபி ஆசாத்.

டெல்லியில் இன்று, செய்தியாளர்களிடம் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை குறித்து ஜி23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்தே காங்கிரசாருக்கு என்னிடம் பிரச்னை உள்ளது. அவர்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ, கேள்விகளை எழுப்புவதையோ அவர்கள் எப்போதும் விரும்பவில்லை. 

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற என்னை அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில நண்பர்களே என்னைப் பற்றி குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். ராகுல் காந்தியை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அவருக்கு ஆர்வம் இல்லை. ராகுல் காந்திக்கு அரசியல் செய்யும் சூட்சுமம் தெரியாது. அதற்கான திறன் இல்லை. அதனால் ராகுல் காந்திக்கு மூத்த தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சோனியா காந்தி விரும்பினார்.

நான் பா.ஜனதாவில் சேர மாட்டேன். அதில் சேருவது காஷ்மீரில் எனது அரசியலுக்கு பயன்படாது. பா.ஜனதாவின் கைப்பிடியில் சிக்கியவர்கள்தான் இந்த தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். காஷ்மீர் சட்டசபை தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படு்ம். 

எனவே, அங்கு விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன். அங்குள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். நான் தேசிய அளவிலான திட்டம் எதுவும் வகுக்கவில்லை. இனிவரும் நாட்களில் அதுபற்றி முடிவு செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ghulam Nabi Azad speech about speech about BJP


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->