புதிய இலக்கை நோக்கி செல்ல தயாராகுங்கள்...! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜய் வாழ்த்து...!
Get ready move towards new goal Vijay congratulation who have passed 12th standard
இன்று +2 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.03 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மொத்தமாக 7,53,142 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும்,வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தத் தேர்வில், மாணவர்கள் 93.16 % மாணவர்கள் 96.07 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் ''விஜய்'' மனமார்ந்த வாழ்த்து தெரிவித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
விஜய்:
அதில் அவர் தெரிவித்ததாவது,"12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்.வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.
விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்! " எனத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சந்தித்து பரிசு வழங்கினார் என்பது அனைவரும் அறிந்தவை.
English Summary
Get ready move towards new goal Vijay congratulation who have passed 12th standard