காத்து வாங்கிய கரூர் பொதுக்கூட்டம்.. "காலி ஓ ஜிம்கானா".. அண்ணாமலையை பங்கம் செய்த காயத்ரி.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மாற்றத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் தமிழக பாஜகவைச் சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாற்றத்திற்கான மாநாட்டில் லட்சக்கணக்கான பாஜகவினரும், பொது மக்களும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில நூறு பாஜக தொண்டர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளனர். அண்ணாமலை பேசியபோது மேடை அருகில் மட்டுமே கூட்டம் இருந்ததால் லட்சக்கணக்கான பிளாஸ்டிக் சேர்கள் காலியாக இருந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பாஜக எதிர்ப்பாளர்களும், திமுகவினரும் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷை குறிப்பிட்டு "சார் போஸ்ட்" என தாலிச்சார்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கலாய்த்து உள்ளார். மேலும் "அவன் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியல் யார் பார்க்க வேண்டும்? காலியோ ஜிங்காவோ" என அண்ணாமலையை கலாய்த்து உள்ளார்.

இதற்கெல்லாம் முறைப்படி மேலே போய் "தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரி ரொம்ப கலரா சும்மா தகதகன்னு இருக்கீங்க. என்ன பனிமூட்டம் ஆ இருக்கிறது.? தம்பி அவுன கூட்டம் கூட்டமா மாநாடுனு கிளம்புகிறார்கள். அங்கே பாரு தம்பி ஒரு கூட்டமே ஆரஞ்சு பச்சை கொடி ஏந்தி அருவாரமா வருகிறார்கள். வரும் ஆனா வராது" என நடிகர் வடிவேலுவின் காமெடியை குறிப்பிட்டு கலாய்த்து உள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri raguram criticized tn BJP president annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?




Seithipunal
-->