அதிமுகவில் இணையும் பிரபல நடிகைகள்.? பாஜகவினர் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகைகள் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் மற்றும் சமீபத்தில் விலகிய கவுதமி ஆகியோர் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு முன்பாக இருவரும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு விலகினார்.

தன் சொத்துக்களை ஏமாற்றியவருக்கு பாஜக அடைக்களம் கொடுப்பதாக புகார் கூறிய நிலையில் அக்கட்சியில் கவுதமி விலகினார். கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணையாமல் இருந்த காயத்ரி ரகுராமனும், சமீபத்தில் விலகிய கவுதமியும் ஓரிரு நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றம் சாட்டி வெளியேறுபவர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைவது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gayathri raghuram gaithami going to join AIADMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->