கஞ்சா கம்பெனி அமேசான்.! அடப்பாவிகளா., இப்படி பண்ண ஆரம்பிச்சுட்டானுகளே.!  - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில், இ-காமர்ஸ் தளம் (Amazon) மூலம் இனிப்புப் பொருட்களை விற்பனை செய்வது போல் கஞ்சா விற்பனை செய்ய முயற்சி நடந்துள்ளது.

இதுக்கு சம்மந்தமாக அமேசான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்டீவியா, ஆலை சார்ந்த இனிப்புகளை விற்பனை செய்வது போல் அமேசான் நிறுவனம் மூலம் 2.7 கிலோ கஞ்சா சப்ளை செய்து உள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமேசான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்களுக்கு எதிராக போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (NDPS) சட்டத்தின் 38வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பிந்த் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் தெரிவித்து உள்ளார்.

நவம்பர் 13 அன்று குவாலியரில் வசிக்கும் பிஜேந்திர தோமர் மற்றும் கல்லு பாவையா என்ற சூரஜ் ஆகியோரிடம் இருந்து 21.7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட பின்னர், மாவட்டத்தில் உள்ள கோஹாட் காவல் நிலையத்தில் NDPS சட்டத்தின் கீழ் வழக்கு இந்த பதிவு செய்யப்பட்டது. போலீசாரின் அந்த எப்ஐஆரில் எந்த ஒரு தனிப்பட்ட அதிகாரியின் பெயரையும் குறிப்பிடவில்லை.

இதுகுறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "அமேசான் தளத்தின் மூலம் சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்வதை அனுமதிக்காது. இந்த விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அமேசான் வழங்கும்" என்று அறிக்கையில் கூறியிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ganja company amazon


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->