விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா...? - பொங்கி எழுந்த செங்கோட்டையன்
Controversial talk about Vijay Is Nayinar Nagendran good human being Sengottaiyan gets angry
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள தாளமுத்து–நடராஜன் திடலில் உற்சாகமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்தன.

அப்போது, கட்சிகள் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை; முதலில் வெளியில் வந்து நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டும்.நடிகை திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்” என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. அதிலும் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தெரிவித்த இந்த கருத்துக்கு த.வெ.க. தரப்பில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
இதுகுறித்து த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் பதிலளிக்கையில், “பாஜக ஒரு பெரிய கட்சியா? நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா...?” என கடுமையான வார்த்தைகளை கண்டனத்துடன் தெரிவித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தைப் போர் சூடுபிடித்துள்ளது.
English Summary
Controversial talk about Vijay Is Nayinar Nagendran good human being Sengottaiyan gets angry