ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயணம்...! - முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார் - Seithipunal
Seithipunal


நேற்று ஆந்திரப் பிரதேசத்தில், பெண்களுக்கு அடுத்தபடியாக மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

2024 தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி அளித்த ‘சூப்பர் சிக்ஸ்’ வாக்குறுதிகளைப் படிப்படியாக அமல்படுத்தி வரும் அவர், ஏற்கனவே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தியுள்ளார்.

தற்போது ‘மாற்றுத்திறனாளிகளின் சக்தி’ எனும் பெயரில் மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

குண்டூர் மாவட்டம் மங்களகிரி பேருந்து நிலையத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், பயனாளிகளுடன் பேருந்தில் பயணம் செய்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் மூலம் ஆந்திராவில் சுமார் 12.5 லட்சம் பேர் பயனடைவர் என்றும், 5 வகை அரசுப் பேருந்துகளில் அவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500 ஆக இருந்த நிதியுதவி, தற்போது தங்களது ஆட்சியில் ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free Bus Travel Persons Disabilities Andhra Chief Minister Chandrababu Naidu Launches Initiative


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->