போதிய வருமானம்‌ இல்லாத 12,959 திருக்கோயில்கள்.. நிதியை உயர்த்திய முதலைச்சர் முக ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


போதிய வருமானம்‌ இல்லாத 12,959 திருக்கோயில்களில்‌ ஒருகால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக ரூ.129.59 கோடி வைப்புநிதிக்கான காசோலை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ வழங்கினார்‌.

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ நேற்று தலைமைச்‌ செயலகத்தில்‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை சார்பில்‌ போதிய வருமானம்‌ இல்லாத 12,959 திருக்கோயில்களில்‌ ஒருகால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக வைப்பு நிதியினை ஒவ்வொரு கோயிலுக்கும்‌ ஒரு இலட்சம்‌ ரூபாயிலிருந்து 2 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தி, மொத்தம்‌ 129 கோடியே 59 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்‌ அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்‌ வைப்பு நிதியாக முதலீடு செய்யும்‌ விதமாக அந்நிறுவனத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ மேலாண்மை இயக்குநர்‌ முனைவர்‌ அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., வழங்கினார்‌.

போதிய வருமானம்‌ இல்லாத திருக்கோயில்களில்‌ ஒரு கால பூஜையாவது நடைபெறுவதற்கு ஏதுவாக பெரிய திருக்கோயில்களின்‌ உபரி நிதியிலிருந்து நிதி உதவி செய்யும்‌ விதமாக, ஆலய மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிதியின்‌ கீழ்‌ 5 கோடி ரூபாய்‌ வைப்புநிதி ஏற்படுத்தப்பட்டு, அதில்‌ இருந்து கிடைக்கப்பெறும்‌ வட்டித்தொகையிலிருந்து திருக்கோயில்களுக்கு ஒருகால பூஜை நடைபெறுவதற்கு நிதி உதவி வழங்கிட வழிவகை செய்யப்பட்டது.

தற்போது, ஒருகால பூஜை நடைபெறும்‌ 12,959 திருக்கோயில்களுக்கு வைப்பு நிதியாக ஒரு இலட்சம்‌ ரூபாய்‌ மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை முதலமைச்சர்‌, ஒவ்வொரு கோயிலுக்கும்‌ ஒரு இலட்சம்‌ ரூபாயிலிருந்து 2 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தி, மொத்தம்‌ 129 கோடியே 59 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்‌ அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்‌ வைப்பு நிதியாக முதலீடு செய்யும்‌ விதமாக வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fixed deposit for income less temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->