ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்திக்குத் தடை விதிக்கலாமே? - உயர்நீதிமன்றம் கேள்வி!
Fireworks Factory Safety Madras HC asks if production ban from April to June can prevent accidents
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 21, 2026) அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோர விபத்து: விருதுநகர் அருகே முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீதிபதிகளின் கேள்வி: தொடர்ச்சியாகப் பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்வது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விபத்துகளைத் தடுக்க அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.
உற்பத்திக்கான தடை: கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்தியைத் தடை செய்யலாமே என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.
காப்பீடு உறுதி: பட்டாசு தொழிலாளர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு செய்த பின்னரே அவர்களைப் பணியில் ஈடுபடுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
விசாரணை ஒத்திவைப்பு: விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இழப்பீடு வழங்குவது குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் அரசு முறையிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Fireworks Factory Safety Madras HC asks if production ban from April to June can prevent accidents