ஜெயலலிதாவுக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர் திடீர் பாராட்டு..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தை அடுத்த ஆரப்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கழிவறை கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதனை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "2025-2026 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது.

குடும்பத் தலைவலிக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன. இது குறித்தான அறிவிப்பு 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெறுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார்.

ஜெயலலிதா அமல்படுத்திய விஷன்-2023 என்ற திட்டம் சிறப்பான திட்டம். அதனை நாங்களும் பின்பற்றி வருகிறோம். கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிதிநிலை சிறப்பாக இருந்தது. ஜெயலலிதா சிறைக்குச் சென்றதும், உடல்நிலை சரியில்லாமல் போனதும் மற்றும் அவரது மறைவுக்கு பின்னரான 7 முதல் 8 ஆண்டு கால ஆட்சியில் நிதி நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக அமைச்சரின் திடீர் பாராட்டு அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Finance Minister PTR praises Jayalalitha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->