திமுகவின் முதல் எம்பி., வீட்டில் நடந்த படுகொலை சம்பவம்.! மருமகன், கூலிப்படை கைது.! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினரின் பேரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

திமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் சோமசுந்தரம். இவரின் பேரன் ராஜேந்திரன். ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் ராஜேந்திரனை வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். திமுக வின் முதல் எம்பி.,யின் பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், போலீசார் ராஜேந்திரனின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. இராஜேந்திரனின் மருமகன் நவீன் அளித்த பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது.

உடனடியாக போலீசார் அவரை காவல் விசாரணை வளையத்தில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் இந்த தீவிர விசாரணையில் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்டதன் முழு காரணமும் வெளிவந்தது.

ராஜேந்திரனுக்கு அதிகப்பட்சமாக சொத்துகள் இருந்த காரணத்தினால், அதில் தனக்கு பங்கு வேண்டும் என்று ராஜேந்திரனிடம் நவீன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ராஜேந்திரன் தனது சொத்தில் சொத்தையும், பணத்தையும் நவீனுக்கு தர மறுத்துள்ளார்.

அண்மையில் ராஜேந்திரன் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை பேளுக்குறிச்சி பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்து கொண்ட நவீன் தனது மாமனார் ராஜேந்திரனிடம் நேரடியாக சென்று நிலத்தை விற்ற பணம் எங்கே என்று கேட்டுள்ளார். ஆனால் ராஜேந்திரன் உனக்கு பணம் தரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நவீன் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நவீன், கூலிப்படை ஒன்றை தயார் செய்து,  அன்று இரவு வீட்டுக்குள் புகுந்த ராஜேந்திரனை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் நவீன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex mp grand son murder case


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal