ஈரோட்டில் பர்தா போட்டு கள்ள ஓட்டு! அதிர்ச்சி வீடியோ! பெண் வாக்காளர் பரபரப்பு பேட்டி! 
                                    
                                    
                                   Erode East By Election 2025 voting 
 
                                 
                               
                                
                                      
                                            ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
இதனையடுத்து அந்த தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தன் படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி உள்ளது. சரியாக மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அ.தி.மு.க., பா.ஜனதா, தமிழக வெற்றிக் கழகம், தே.மு.தி.க. உள்பட பல எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், களத்தில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். 
தி.மு.க., vs நாம் தமிழர் கட்சி இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே, காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். 
பகல் 12 மணி நிலவரப்படி 26 சதவீத  வாக்குப்பதிவு நடந்துள்ள சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டதாகவும், தன்னை வாக்களிக்க அதிகாரிகள் விடாமல் வெளியே அனுப்பிவிட்டதாகவும் பெண் ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருதுகுறித்த காணொளியை வெளியிட்டுள்ள அதிமுக ஐடி விங்க், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என அதிமுக அன்றே கூறியதாக தெரிவித்துள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Erode East By Election 2025 voting