ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு சவால் விடும் கொ.ம.தே.க ஈஸ்வரன்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்தை தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் திமுக தரப்பிலிருந்து காங்கிரஸ் போட்டியிடுகின்றது. அதேபோல் அதிமுக தரப்பிலிருந்து தமாகாவும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரோட்டில் இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஈஸ்வரன் எம் எல் ஏ அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. அதனால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அளிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன். அதேபோல் திமுக கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக அக்கட்சியின் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். எந்த அளவுக்கு பாஜக வளர்ந்து வருகிறது என்பதை நிரூபிக்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by election KMTK Eshwaran challenge to BJP Annamalai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->