அடேங்கப்பா.. அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு "ரூ.583 கோடியா" .!! யாரு பாருங்க.!!
Erode aiadmk candidate aatral Ashok asset value Rs583crs
மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ஆற்றல் அசோக்கின் சொத்து மதிப்பு அரசியல் வட்டாரத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் நேற்று தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னுடைய வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும், அசையும் சொத்து மதிப்பு ரூ.526.53 கோடி எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.56.95 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது எனவும், ஆற்றல் அசோக் குமாரின் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி எனவும், இருவர் பெயரிலும், வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Erode aiadmk candidate aatral Ashok asset value Rs583crs