பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி - அதிகாரபூர்வ செய்தி வெளியானது! - Seithipunal
Seithipunal


இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். 

இவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் தென் மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் பெங்களூருக்கு வரும் அவர் சென்னை-மைசூர் இடையான வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 

பின்னர் அதே விமான மூலம் பெங்களூரில் இருந்து மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுகவின் வந்துள்ளனர்.

எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS Welcome to PMModi 11112022


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->