'பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்': இபிஎஸ் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


அ​தி​முக பூத் கிளை அமைக்​கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால், அதற்​கென நியமிக்​கப்​பட்ட மாவட்ட பொறுப்​பாளர்​கள், அப்​பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​பட்டுள்ளனர். அவர்​கள் அந்தந்த மாவட்டங்களில் கட்​சிப் பணி​கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடு​படு​மாறு அக்கட்சியின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்​கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 

'தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட ஒன்​றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப்பகு​தி​களில் பூத் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவ​தற்காக, மாவட்​டம் ​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்டு அப்​பணி​கள் முழு​மையடைந்​துள்​ளன. இந்​நிலை​யில், மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் அனை​வரும் அப்​பணி​யில் இருந்து விடுவிக்​கப்​படு​கிறார்​கள். இவர்​கள் தங்​கள் மாவட்டத்​துக்கு உட்​பட்ட, தாங்​கள் சார்ந்த சட்​டப்​பேரவை தொகு​திகளில் கட்​சிப் பணி​கள், தேர்​தல் பணி​களில் ஈடுபட வேண்​டும்.

சென்னை புறநகர், சேலம் மாநகர், கன்​னி​யாகுமரி மேற்கு ஆகிய மாவட்​டங்​களில் பூத் கிளை அமைக்​கும் பணி​கள் இன்​னும் நிறைவு​பெறாத​தால், அம்​மாவட்​டங்​களுக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள மாவட்​டப் பொறுப்​பாளர்​கள் தொடர்ந்து அப்​பணி​களை மேற்​கொள்​வார்​கள். பூத் கிளை நிர்​வாகி​கள் அனை​வரை​யும் ஆன்​லைனில் ஒருங்​கிணைத்​து, தேர்​தல் பணி​களை விரை​வாக மேற்​கொள்ள பயிற்சி அளிக்க தகவல் தொழில்​நுட்​பப் பிரிவைச் சேர்ந்த பொறுப்​பாளர்​களுக்​குத் தேவை​யான ஏற்​பாடு​களை​யும் செய்து கொடுத்​து, அவர்​களுக்கு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS urges booth committee in-charges to show seriousness in district party work


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->