ஓ.பி.எஸால் டிடிவி. தினகரன் அணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்! திடீர் மாற்றம்.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!! - Seithipunal
Seithipunal


துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் சொந்த மாவட்டமான தேனியில், உள்ளாட்சி தேர்தலில் யாரை நிறுத்துவது என்கிற சலசலப்பு நிலவி வருகிறது. தேனியில் உள்ள 4 எம்எல்ஏ தொகுதிகளில், 2 தொகுதி  திமுக வசம் உள்ளது. அதனால், இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் தகுதியான ஆளை நிறுத்த வேண்டும் என அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.

உள்ளாட்சித் தேர்தலில் தர்மயுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அதிமுக வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடியின் ஆதரவாளர்கள், உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வேண்டியவர்களை மட்டுமே நிறுத்த வேண்டும் என எடப்பாடிக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, எம்எல்ஏ ஜக்கையன் மகன் பாலாவை கம்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்த சொல்கிறார்கள். இதில் ஓபிஎஸ் தரப்புக்கு திருப்தி இல்லை. இந்த பதவிக்கு அமமுகவுக்கு சென்று திரும்ப வந்த ஒருத்தரும் முயற்சி செய்துவருகிறாராம்.

எம்எல்ஏ ஜக்கையன், எம்பி சீட்தான் கையை விட்டுப்போச்சு. இந்த முறை மகனுக்கு நகராட்சி தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார் ஜக்கையன். இவர்கள் பிரச்சனையால் டிடிவி தினகரன் அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பு  உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps supporters shock


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal