ஸ்டாலினுக்கு அதற்கு திராணியில்லை.. மேடையில் பங்கம் செய்த எடப்பாடி பழனிசாமி.!  - Seithipunal
Seithipunal


சேலத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்றைய முதல்வரால் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை என்று பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் இன்று அறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். அவர் மேடையில் பேசிய போது, "அதிமுக ஆட்சியில் திமுகவினர் எண்ணற்ற பல பிரச்சினைகளை உருவாக்கி அழுத்தம் கொடுத்தார்கள். 

எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தார்கள். ஆனால், அவர்கள் செய்த ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து காவல்துறை பாதுகாப்பு கொடுத்து அனைத்தையும் சமாளித்தோம். 

ஆனால், தற்பொழுது இது போன்ற போராட்டங்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலினால் சமாளிக்க முடியவில்லை. எனவே, தான் காவல்துறையை ஏவி போராட்டம் செய்பவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்." என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps speech in salem about mk stalin


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal