அந்த 5 தொகுதிகள்.. குறி வைத்த ஈ.பி.எஸ்.. கோதாவில் குதிக்கும் முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 19 4 2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பிலும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், சென்னை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, கன்னியாகுமரி தொகுதிக்கு முன்னாள் துணை அமைச்சர் நாஞ்சில் வின்சென்ட். 

காஞ்சிபுரம் தொகுதிக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தென்காசி தொகுதிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரைபாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சூழலில் கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து எதிர் தரப்பினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps released AIADMK election incharge list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->