அடுத்த குறி இவர்கள் தான்! ஈபிஎஸ் போடும் மாஸ்டர் பிளான்! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவு!
EPS order convey to minority people no alliance with BJP
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக அதிமுக தலைவர் மற்றும் அதிமுக குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டை மட்டம் தட்டு வகையில் பேசியதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டது.
பாஜக தலைமை உரிய நடவடிக்கை எடுக்காததால் அதிமுக மீதான அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு தொடர்ந்து. அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கூட்டணி முறிவுக்கு வழி வகுத்து விட்டது. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்ததோடு இது அதிமுக தலைமையின் கருத்து என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதாக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு முக்கிய ஆலோசனைகளை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு பாஜகவை முழுமையாக எதிர்ப்பது குறித்து மாவட்ட செயலாளருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். எதிர்வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மட்டுமல்லாது, பிறகு நடைபெறும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது.
அதிமுகவுக்கு எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்க தயார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது சிறுபான்மை மக்களை சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிடும் என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தால் கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துச் சொல்லுங்கள் அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.
English Summary
EPS order convey to minority people no alliance with BJP