பாமக தலைவர் அன்புமணி இராமதாசுக்கு தலைவர்கள் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும், மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர், அன்பு சகோதரர் டாக்டர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், புதிய தலைவரை தேர்வு செய்திருக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவரது மக்கள் பணி மேலும் சிறக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக என் வாழ்த்துக்கள்! அவர் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கும் என் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களது பொது வாழ்க்கையும், அரசியல் பணிகளும் சிறக்க எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உடலைப் பேணும் விருப்பில் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர், ஆரோக்கியக் குறை ஏற்படுத்தும் பழக்கங்களின் மீது ஒவ்வாமை கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு பாமக-வின் தலைவராக உயர்ந்திருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் வாழ்த்து" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eps ops mks kamal seema wish Dr Anbumani Ramadoss


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->