அண்ணாமலை குறித்து விமர்சிக்க கூடாது - இபிஎஸ் அறிவுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்களும் அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த தேவையற்ற விவாதங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படாதா? என பலர் காத்திருப்பதால் அதற்கு இடம் தந்து விடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் வேகப்படுத்துமாறும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eps instruction dont criticize to annamalai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->