மு.க ஸ்டாலின் அவர்களே.. "மக்கள் நலமாக இல்லை"..!! - ட்விட் போட்டு தாக்கிய எடப்பாடி.!!
EPS criticized TNGovt neengal nalama scheme
நம் நாடு அரசு வழங்கும் திட்டங்கள் பயனாளிகளைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையிலும் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அறியவும் பயனாளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு கருத்து கேட்டறியும் நீங்கள் நலமா என்ற புதுமையான திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் "நீங்கள் நலமா" என்று கேட்கும் திரு.மு.க ஸ்டாலின் அவர்களே
நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!
சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!
விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!

எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!
இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!" என விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
English Summary
EPS criticized TNGovt neengal nalama scheme