ட்ரோன்கள் தடை! முதலமைச்சர் வருகைக்காக திருப்பத்தூரில் 25,26 பலத்த பாதுகாப்பு!
Drones banned Heavy security in Tirupattur for the Chief Ministers visit on 25th and 26th
திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்தரவல்லி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார்.

அன்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து 26-ந்தேதி காலை 9 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் 25000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 25, 26 ஆகிய 2 நாட்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பலத்த பாதுகாப்பு திருப்பத்தூரில் நிறுவப்பட்டு வருகிறது.
English Summary
Drones banned Heavy security in Tirupattur for the Chief Ministers visit on 25th and 26th