காலியாக இருக்கும் நாற்காலிகள்..! முக்கிய துறைகளுக்கு எப்போது வருவார்கள் அமைச்சர்கள்...? - Seithipunal
Seithipunal


234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின்படி, முதலமைச்சரைச் சேர்த்து அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் 15 சதவீதத்தை மீறக்கூடாது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கும் வாய்ப்பு உள்ளது.ஆனால் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையில் 10 பேர் மட்டுமே அமைச்சுப் பொறுப்பேற்றுள்ளனர்.

இதனால் இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதேவேளை கம்யூனிஸ்டு கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் இணைய விருப்பமில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் ஒன்பது அமைச்சர்களுக்கான துறைப் பொறுப்புகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சித்துறை ஆனந்துக்கு, பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கு, சுகாதாரத்துறை அருண்ராஜுக்கு, நிதித்துறை செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் பல முக்கிய இலாகாக்கள் இன்னும் யாருக்கும் வழங்கப்படாமல் காத்திருக்கின்றன.

குறிப்பாக வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு-சிறு-நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்து சமய அறநிலையம், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன் மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

இந்த துறைகளுக்கான புதிய அமைச்சர்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும், த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி தரப்பினருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வளாகங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Empty Chairs When Will Ministers Arrive Key Departments


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->