தேர்தல் களம் தீப்பிடித்தது...! சீட்டுக்கும் நோட்டுக்கும் தலைகுனிய மாட்டேன்...! - சீமான் சவால்
election field fire I not bow down ballot and note Seeman challenge
பரபரப்பும் விறுவிறுப்பும் உச்சத்தை எட்டியுள்ள தமிழக சட்டசபை தேர்தல் களம், அரசியல் கட்சிகளின் கடும் போட்டியால் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடிக்காத வரலாற்றை முறியடிக்க, வலுவான கூட்டணியுடன் களமிறங்கியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

மறுபுறம், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோல்வி அடையாத சாதனையை நிலைநிறுத்துவதற்காக கடுமையாக போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரின் அணியிலும் பல கூட்டணி கட்சிகள் இணைந்து களம் சூடுபிடிக்கச் செய்கின்றன.
இதனிடையே, தமிழக அரசியலில் புதிய சக்தியாக களமிறங்கியுள்ள விஜய், மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்ததோடு, தானும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளார்.
அதேபோல், வழக்கம்போல் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, சூறாவளி சுற்றுப்பயணத்தின் மூலம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், தமிழக அரசியலில் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பெரம்பலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சீமான் ஆவேசமாக பேசியதாவது: “எனக்கு முன்னால் பதவி வேண்டுமா, மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமா என்ற கேள்விதான் நிற்கிறது.
பணமா முக்கியம்? அல்லது நம் இன உரிமையா முக்கியம்? நான் யாரிடமும் சீட்டுக்கும் நோட்டுக்கும் தலைகுனிந்து நிற்க மாட்டேன். சரணடைந்து வாழ்வதைவிட, போராடி மரணமடைவதே மேலானது. உயிரை இழந்தாலும் பரவாயில்லை; ஆனால் உரிமையை இழக்க முடியாது.மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து வாழ்வதே எங்கள் கொள்கை.
நான்கு திசைகளிலும் எதிரிகள் இருந்தாலும், நடுவில் நாம் தமிழர் கட்சி உறுதியாக நிற்கிறது என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்,” என தீவிரமாக உரையாற்றினார்.சீமான் பேச்சு தேர்தல் களத்தில் புதிய அரசியல் சூட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
election field fire I not bow down ballot and note Seeman challenge