தேர்தல் களம் பரபரப்பில்...! விஜய் தலைமையில் தவெக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு...! - 800 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பு
Election campaign full swing Vijay leads tvk election manifesto today release Only 800 executives participate
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் ஏற்கனவே தங்களின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க 800 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன், க்யூஆர் கோடு (QR Code) அடிப்படையிலான அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனது பிரசாரங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் போன்ற அதிரடி வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று வெளியாகும் முழுமையான தேர்தல் அறிக்கையில் இன்னும் பல புதிய மக்கள் நலத் திட்டங்கள் இடம்பெறும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
Election campaign full swing Vijay leads tvk election manifesto today release Only 800 executives participate