சூப்பர் பா! கல்வி விருது வழங்கும் விழா...! வருகை தந்த விஜய்
Educational Awards Ceremony Vijay arrives
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திலுள்ள தனியார் ஓட்டலில் த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா 3-வது ஆண்டாக இன்று, இந்தாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில் இவ்விழா நடைபெறுகிறது.

இவ்விழாவிற்கு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 2000 பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி அடையாள அட்டைகள் மூலம் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 'விஜய்' இன்று காலை 9.20 மணியளவில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஆட்டம் பாட்டம், கலைநிகழ்ச்சியென விஜயை வரவேற்றனர்.
English Summary
Educational Awards Ceremony Vijay arrives