அரசியல் கால்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை நாடியதால் அசிங்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி...! - முதலமைச்சர்
Edappadi Palaniswami was humiliated by seeking court action jealous Chief Minister
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.அப்போது அவர் தெரிவித்ததாவது," திருப்பூர் மாவட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் அறவே புறக்கணிப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி ஆளும்போது இந்த திருப்பூருக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?.

அப்போதே கலைஞர் திருப்பூரில் அறிவித்த 5 பாலங்கள் அமைக்க உத்தரவிட்ட நிலையில், பணியை முடக்கியது அ.தி.மு.க. ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட 3 ரெயில்வே பாலம் உள்பட 5 பாலங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில் மீண்டும் நடைபெறுகிறது.
மேலும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் பணி முடித்து செயல்படுத்தி வருகிறோம்.எடப்பாடி பழனிசாமி எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கினார்? எந்த தைரியத்தில் திருப்பூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார் என தெரியவில்லை.
அ.தி.மு.க.வின் தோல்விப்பயணம் இதே மேற்கு மண்டலத்திலிருந்து தொடங்கிவிட்டது. நடைபெற்று வரும் 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 'சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் 'எடப்பாடி பழனிசாமி'. ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை நாடாதீர் என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அபராதமும் விதித்தது" என்று தெரிவித்தார்.தேர்தலுக்காக அரசியல் களம் சூடுபிடிக்க தோடங்கியுள்ளது.இதனால் எதிரும் புதிருமாக திமுக மற்றும் அதிமுக சாடிக்கொள்கின்றனர்.இந்த கருத்துக்களை அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்புடன் காண்கின்றனர்.
English Summary
Edappadi Palaniswami was humiliated by seeking court action jealous Chief Minister