தமிழக சட்டமன்ற தேர்தல்; 35 தொகுதிகளை கேட்டும் பாஜக; மறுப்பு தெரிவிக்கும் இ.பி.எஸ்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.  அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது தொகுதிப் பங்கீட்டில் இறங்கியுள்ளன.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (பிப்ரவரி 24) வழங்கியுள்ளது. இதில், நேரடியாகப் போட்டியிடுவதற்காக 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக, சென்னையின் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி, திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, திருவண்ணாமலை, பழனி ஆகிய தொகுதிகள் என பட்டியலில் அடங்கியுள்ளது.

இந்த பட்டியலை பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.  

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 04 தொகுதிகளில் மாத்திரம் வெற்றிப் பெற்றது. இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோரியுள்ளது. ஆனால் அதிமுக தலைமை சுமார் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இவ்வாறு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி இதுவரை சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 45 தொகுதிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami rejects BJPs demand for 35 seats in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->